/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காரைக்கால் மீனவர்கள் கைது விவகாரம் பிரதமரை முதல்வர் சந்திக்க வலியுறுத்தல் பிரதமரை முதல்வர் சந்திக்க வலியுறுத்தல்

ADDED : மே 30, 2024 04:52 AM
புதுச்சேரி: காரைக்கால் மீனவர்கள் கைது விவகாரத்தில் பிரதமர், உள்துறை அமைச்சரை முதல்வர் ரங்கசாமி சந்தித்து பேச வேண்டும் என, முன்னாள் எம்.பி., ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
அவரது அறிக்கை:
இலங்கை கடற்படையினரால் காரைக்கால் மீனவர்கள் கைது செய்யப்படுவதில் இருந்து நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று முதல்வர், கிழக்கு கடற்படை பிரிவு தளபதியிடம் வேண்டுகோள் விடுத்திருப்பது வியப்பை அளிக்கிறது. கடற்படை தளபதியால், இலங்கை அரசிடம் பேசி மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க முடியாது.
இலங்கை அரசிடம், பிரதமர், உள்துறை அமைச்சர், வெளியுறவுத் துறை அமைச்சரால் மட்டுமே பேசி முடிவெடுக்க முடியும். அவர்களை முதல்வர் இதுவரை சந்தித்து, காரைக்கால் மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது பற்றியும், அதை தடுப்பதற்கும் கோரிக்கை வைக்கவில்லை.
காரைக்கால் மீனவர்கள் எப்போதெல்லாம் கைது செய்யப்படுகிறார்களோ அப்போது மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதோடு சரி. காரைக்கால் மீனவர்கள் மீது அக்கறை இருந்தால், பிரதமரை சந்தித்து கோரிக்கையை வலியுறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர், கூறியுள்ளார்.