தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்த கொலை குற்றவாளிக்கு ‘பிடிவாரன்ட்’

கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்த கொலை குற்றவாளிக்கு ‘பிடிவாரன்ட்’

கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்த கொலை குற்றவாளிக்கு ‘பிடிவாரன்ட்’


ADDED : ஜூலை 05, 2026 11:52 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 05, 2026 11:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்த கொலை வழக்கு குற்றவாளியை போலீசார் தேடி வருகின்றனர்.

குயவர்பாளையத்தை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் விக்கி, 27. இவர், கடந்தாண்டு ஒரு கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இவரது கொலை தொடர்பாக உருளையன்பேட்டை போலீசார் 9 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை 3வது கூடுதல் மாவட்ட கோர்ட்டில் நடந்து வருகிறது.

இந்த வழக்கில் நிபந்தனை ஜாமினில் வெளி வந்த புதுசாரம் அசோக்குமார்,31, என்பவர் கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவானார். இதனையடுத்து அவரது நிபந்தனை ஜாமினை ரத்து செய்த நீதிபதி, பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.

தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் உருளையன்பேட்டை போலீசாருக்கு பரித்துரைத்தார். அதன் பேரில், அசோக்குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us