/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பிரைனி ப்ளூம்ஸ் பள்ளியில் கலை, அறிவியல் கண்காட்சி
/
பிரைனி ப்ளூம்ஸ் பள்ளியில் கலை, அறிவியல் கண்காட்சி
ADDED : பிப் 25, 2025 04:47 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: திருக்கனுார் பிரைனி ப்ளூம்ஸ் சி.பி.எஸ்.இ., பள்ளியில் 9ம் ஆண்டு கலை, அறிவியல் கண்காட்சி நடந்தது.
பள்ளி தாளாளர் அருண்குமார் தலைமை தாங்கினார். துணை தாளாளர் திவ்யா முன்னிலை வகித்தார். புதுச்சேரி சைபர் கிரைம் சீனியர் எஸ்.பி.,நாராசைதன்யா, கண்காட்சியை துவக்கி வைத்து பார்வையிட்டார்.
அரசு நலவழி துறை டாக்டர் டேனியல்ரீகன், முன்னணி (லீட்) குழுமத்தின் தெற்கு மண்டல அலுவலர் ஹரிஹரன் வாழ்த்தி பேசினர்.
மாணவர்களின் அறிவியல் கண்காட்சியை, புதுச்சேரி மற்றும் தமிழக பகுதியை சேர்ந்த மாணவர்கள், பெற்றோர், பொதுமக்கள் பார்வையிட்டனர்.

