/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
லட்சுமிநாராயணா மருத்துவமனையில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை
/
லட்சுமிநாராயணா மருத்துவமனையில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை
லட்சுமிநாராயணா மருத்துவமனையில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை
லட்சுமிநாராயணா மருத்துவமனையில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை
ADDED : மே 01, 2024 01:55 AM
புதுச்சேரி : புதுச்சேரியில் முதல் முறையாக லட்சுமிநாராயணா மருத்துவமனையில் தோள்பட்டை மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
புதுச்சேரியைச் சேர்ந்த 40 வயது நபர் தோள்பட்டை முறிந்து, 5 வருடமாக செயலின்றி இருந்த நிலையில் சிகிச்சைக்காக லட்சுமிநாராயணா மருத்துவமனையில் கடந்த சில நாட்களுக்கு முன் அனுமதிக்கப்பட்டார்.
கல்லுாரி முதல்வர் ஜெயலட்சுமி, மருத்துவ கண்காணிப்பாளர் அசையாஸ் போஸ்கோ சந்திரகுமார், எலும்பியல் துறை தலைவர் விஜயராகவன் வழிகாட்டுதல்படி, டாக்டர்கள் அபிலாஷ், சாய் ராமக்கிருஷ்ணன், ராஜவர்மன் மற்றும் கோபிநாத் அடங்கி குழுவினர் அந்த நபருக்கு வலது தோள்பட்டை மூட்டு மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தனர்.
அறுவை சிகிச்சை முடிந்து எந்தவித உபாதைகள் இன்றி நல்ல உடல் நிலையில் உள்ளார். இது புதுச்சேரியில் முதல் முறையாக நடந்த தோள்பட்டை மூட்டு மாற்று அறுவை சிகிச்சை என்பது குறிப்பிடதக்கது.
அறுவை சிகிச்சை செய்த மருத்துவ குழுவினரை, மருத்துவமனை நிறுவன தலைவர் ஜெகத்ரட்சகன் எம்.பி., பாரத் கல்வி குழும தலைவர் டாக்டர் சந்தீப் ஆனந்த் பாராட்டினர்.
இதுபோன்று முட்டி, இடுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள், முதுகு தண்டு அறுவை சிகிச்சைகள், ஸ்டெம் செல் சிகிச்சை, ஆர்த்ரோஸ்கோபி முதலிய மருத்துவ சேவைகள் சிறந்த நிபுணர்களை கொண்டு எலும்பியல் துறை செய்து வருகிறது என, மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.