/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கூகுள் பே மூலம் லஞ்சம் வாங்கிய ஏ.எஸ்.ஐ.,; விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க சீனியர் எஸ்.பி., உத்தரவு

ADDED : பிப் 24, 2025 04:31 AM
புதுச்சேரி: முதலியார்பேட்டையில் லஞ்சம் வாங்கிய ஏ.எஸ்.ஐ., குறித்து விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க சீனியர் எஸ்.பி., உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரி கொம்பாக்கம் கமலம் நகரைச் சேர்ந்தவர் பாபு. இவரது தாய் இந்திரா, கடந்த 2022ம் ஆண்டு கொம்பாக்கம் கூட்டுறவு வங்கியில் வைத்த 8 சவரன் நகை திருடுபோனது. இதனை மீட்டு தர கடந்த டிச., மாதம் முதலியார்பேட்டையில் நடந்த பொதுமக்கள் குறைதீர்வு முகாமில் டி.ஐ.ஜி., சத்தியசுந்தரத்திடம் புகார் மனு அளித்தார்.
இன்ஸ்பெக்டர் கண்ணன் விசாரித்து, விசாரணை அதிகாரியாக முதலியார்பேட்டை ஏ.எஸ்.ஐ., சுப்ரமணியனை நியமித்தார். புகார் மீது நடவடிக்கை எடுக்க தனது வண்டிக்கு 500 ரூபாய்க்கு பெட்ரோல் நிரப்பவும், தனக்கு 10 நம்பர் ஷூ வாங்க 1,800 ரூபாய் கேட்டார்.
பெட்ரோலுக்கு 500ம், ஷூ வாங்கவும் ஏ.எஸ்.ஐ., சுப்ரமணிக்கு கூகுள்பே மூலம் 1,500 ரூபாயை பாபு அனுப்பினார்.
புகார் மீது நடவடிக்கை எடுக்க தொடர்ந்து பணம் கேட்டு தொந்தரவு செய்யும் ஏ.எஸ்.ஐ., சுப்ரமணி மீது நடவடிக்கை எடுக்க பாபு நேற்று முன்தினம் நடந்த பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாமில் புகார் அளித்தார். சுப்ரமணி பணம் கேட்ட ஆடியோ, கூகுள்பே மூலம் பணம் அனுப்பிய ஆதாரங்களும் ஒப்படைக்கப்பட்டது.
டி.ஐ.ஜி., சத்திய சுந்தரம் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார். அதன்படி, ஏ.எஸ்.ஐ., சுப்ரமணி மீதான புகார் குறித்து விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க முதலியார்பேட்டை போலீஸ் நிலைய அதிகாரிக்கு சீனியர் எஸ்.பி., கலைவாணன் உத்தரவிட்டார். ஏ.எஸ்.ஐ., சுப்ரமணி லஞ்சம் வாங்கியது உண்மையா என விசாரணை நடந்து வருகிறது.