ADDED : ஏப் 16, 2024 05:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : பணம் கொடுத்தது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் தாய், மகனை தாக்கியவர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
மேட்டுப்பாளையம் அடுத்த தருமாபுரி சபரி நகரை சேர்ந்தவர் மணிமேகலை, 40; இவர் தனது மகன் தீனதயாளன் ஆகிய இவரும் வீட்டில் இருந்தனர்.
அதே பகுதியை சேர்ந்த பிரகாஷ், மனைவி, கவிதா மற்றும் கற்பகம் ஆகிய இவரும் மணிமேகலை வீட்டுக்கு சென்று பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக தகராறு செய்தனர்.
இதில், ஆத்திரமடைந்த, கவிதா, கற்பகம் இருவரும் சேர்ந்து, மணிமேகலை, இவரது மகன் தீனதயாளன் இருவரையும் தாக்கினர்.
புகாரின் பேரில், மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

