ADDED : மே 23, 2024 10:31 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம்: சென்ட்ரிங் தொழிலாளியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.
அரியாங்குப்பம் காக்காயந்தோப்பு சின்ன கவுண்டர் வீதியை சேர்ந்தவர் அரிகிருஷ்ணன், 49; இவர் அந்த பகுதியல் உள்ள செசன்ஸ் நகரில் ஒரு வீட்டில் சென்ட்ரிங் பணிக்காக முட்டுகட்டை அமைத்திருந்தார். நேற்று அங்கு சென்று பார்க்கும் போது, முட்டு கட்டைகள் சில காணாமல் போயிருந்தது. அது பற்றி, அவர், அந்த பகுதி சாராயக்கடையில் விசாரித்தார். ஏன் எங்களை விசாரிக்கிறாய் எனக் கூறி அங்கிருந்த 2 பேர் அரிகிஷ்ணனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
புகாரின் பேரில், அரியாங்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து 2 பேரை தேடிவருகின்றனர்.