/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வாணிதாசனார் அரசு பள்ளியில் வானியல் அறிவியல் நிகழ்வு
/
வாணிதாசனார் அரசு பள்ளியில் வானியல் அறிவியல் நிகழ்வு
வாணிதாசனார் அரசு பள்ளியில் வானியல் அறிவியல் நிகழ்வு
வாணிதாசனார் அரசு பள்ளியில் வானியல் அறிவியல் நிகழ்வு
ADDED : மார் 03, 2025 04:08 AM

பாகூர் : சேலியமேடு வாணிதாசனார் அரசு உயர்நிலை பள்ளி சார்பில், வானில் 8 கோள்களும் ஒரே நேர்கோட்டில் வரும் அரிய நிகழ்வை தொலைநோக்கி மூலம் காண்பித்தனர்.
வாணிதாசனார் அரசு உயர்நிலை பள்ளியும், புதுச்சேரி அறிவியல் இயக்கமும் இணைந்து நடத்திய நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் பழனிசாமி தலைமை தாங்கினார்.
புதுச்சேரி அறிவியல் இயக்க தலைவர் மதிவாணன், துணை தலைவர் ஹேமாவதி, பொதுச்செயலாளர் முருகவேல் மற்றும் ஆலோசகர் சேகர் ஆகியோர் கலந்துகொண்டு கோள்கள் பற்றியும், அதன் செயல்பாடுகள் மற்றும் 8 கோள்களும் ஒரே நேர்கோட்டில் வரும் அரிய நிகழ்வை விளக்கி கூறினர்.
தொடர்ந்து, மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர் கள் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பொது மக்கள், அறிவியல் இயக்கத்தின் தொலை நோக்கி வழியாக, வானில் ஒரே நேர்கோட்டில் வரும் கோள்களை கண்டு மகிழ்ந்தனர்.
ஏற்பாடுகளை அறிவியல் ஆசிரியர்கள் சரவணன், செந்தில்முருகன் மற்றும் ஆசிரியர்கள் வெரோனஸ் விஜயலட்சுமி, பிரியதர்ஷினி, செல்வக்குமரன், அன்பரசி, கணேசன், சித்திரைசெல்வி, ஜெயகிருஷ்ணன், மதிவாணன், உடற்கல்வி ஆசிரியர் தனிகைகுமரன் ஆகியோர் செய்திருந்தனர்.