ADDED : ஜூலை 02, 2024 05:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: கடலுார் அடுத்த துாக்கணாம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சோபியா, 33; தவளக்குப்பம் - அபிேஷகப்பாக்கம் சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் வேலை செய்கிறார்.
தவளக்குப்பம் அடுத்த சிங்கிரிகுடியை சேர்ந்தவர் லோகநாதன் தனது லாரிக்கு டீசல் போட வேண்டும் என, கூறினார். பணத்தை பிறகு தருவதாக கூறினார்.
சோபியா மறுக்கவே, அவரை அவதுாறாக பேசினார். தட்டி கேட்ட பங்கு மேலாளர் சபரிநாதனை, லோகநாதன் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார்.
தவளக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து, லோகநாதனை தேடி வருகின்றனர்.