/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போலீஸ்காரர் மீது தாக்குதல் :வில்லியனுார் அருகே துணிகரம்
/
போலீஸ்காரர் மீது தாக்குதல் :வில்லியனுார் அருகே துணிகரம்
போலீஸ்காரர் மீது தாக்குதல் :வில்லியனுார் அருகே துணிகரம்
போலீஸ்காரர் மீது தாக்குதல் :வில்லியனுார் அருகே துணிகரம்
ADDED : மே 29, 2024 05:19 AM
வில்லியனுார், : வில்லியனுார் அருகே ஐ.ஆர்.பி.என்., போலீசை தாக்கிய மூன்று பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
வில்லியனுார் அடுத்த முத்துப்பிள்ளைபாளையம் பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார், 32; ஐ.ஆர்.பி.என்., போலீஸ். கடந்த 26ம் தேதி இரவு பணியை முடித்துவிட்டு, நடராஜன் நகர் வழியாக வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அங்கு நின்றிருந்த மூன்று பேர், அசோக்குமாரை வழிமறித்து ஆபாசமாக திட்டி, கல்லால் தாக்கி, இவ்வழியாக சென்றால் கொலை செய்து விடுவோம் என, மிரட்டல் விடுத்தனர்.
தலையில் பலத்த காயமடைந்த அசோக்குமார், புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். அவர் அளித்த புகாரின் பேரில், வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து, அசோக்குமாரை தாக்கிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர். வில்லியனுார் அருகே ஐ.ஆர்.பி.என்., போலீஸ் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.