தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புவனகிரியில் முன்விரோத தகராறு 3 பேரை வெட்டி கொல்ல முயற்சி

புவனகிரியில் முன்விரோத தகராறு 3 பேரை வெட்டி கொல்ல முயற்சி

புவனகிரியில் முன்விரோத தகராறு 3 பேரை வெட்டி கொல்ல முயற்சி


ADDED : மே 15, 2024 07:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 15, 2024 07:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புவனகிரி : முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட தகராறில் 3 பேரை கத்தியால் வெட்டி கொலை செய்ய முயன்ற 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கடலுார் மாவட்டம், புவனகிரி அடுத்த பெருமாத்துாரை சேர்ந்தவர்கள் திருமலைராஜன், 45; தியாகராஜன். நண்பர்கள்.

இருவரும் மது அருந்தும் போது தகராறு ஏற்பட்டதால் முன்விரோதம் உண்டானது.

இந்நிலையில் திருமலைராஜன், தியாகராஜன் மற்றும் நண்பர்கள் சுந்தரபாண்டியன், பூதவராயன்பேட்டை விஜயகுமார், 41; ஆகியோர் இளப்பகுளம் கீழ்கரை அருகில் நேற்று முன்தினம் மது அருந்தினர்.

அப்போது, திருமலைராஜன், தியாகராஜன் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

ஆத்திரமடைந்த தியாகராஜன் தனது நண்பர்கள் அருண்குமார், விஜி ஆகியோரை சம்பவ இடத்திற்கு வரவழைத்து திருமலைராஜன் மற்றும் அவரது தரப்பினரை கத்தியால் சரமாரியாக வெட்டி கொலை செய்ய முயன்றார்.

பலத்த காயமடைந்த திருமலைராஜன் உட்பட 3 பேர் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

புகாரின் பேரில், புவனகிரி போலீசார் வழக்குப் பதிந்து அருண்குமார், தியாகராஜன், விஜி ஆகியோரை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us