/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரவிந்தர் 152வது பிறந்தநாள் விழா
/
அரவிந்தர் 152வது பிறந்தநாள் விழா
ADDED : ஆக 16, 2024 05:58 AM

புதுச்சேரி: அரவிந்தரின் 152 வது பிறந்த நாளை யொட்டி அரவிந்தர் அறையை ஏராளமான பக்தர்கள் நேற்று தரிசனம் செய்தனர்.
தேசிய மற்றும் ஆன்மீகவாதியான மகான் அரவிந்தர் 1872 ஆம் ஆண்டு ஆக.15ம் தேதி மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் பிறந்தார்.
அரவிந்தரின் 152ஆவது பிறந்த நாளான நேற்று புதுச்சேரி ஒயிட் டவுன் மரைன் வீதியில் உள்ள அரவிந்தர் ஆசிரமத்தில் காலை ஆறு மணிக்கு ஆசிரம வாசிகளின் கூட்டு தியானம் நடந்தது. அதை தொடர்ந்து ஆசிரமத்தில் உள்ள அரவிந்தரின் அறை பொது தரிசனத்திற்கு திறக்கப்பட்டு, கவர்னர் குடும்பத்தினருடன் சென்று அரவிந்தர் அறையில் தரிசனம் செய்தனர்.
மேலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் அரவிந்தர் அறை மற்றும் சமாதியை தரிசனம் செய்தனர்.