/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆட்டிசம் விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
ஆட்டிசம் விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : ஏப் 06, 2024 05:30 AM

புதுச்சேரி: ஏ.ஜி., பத்மாவதி செவிலியர் கல்லுாரி மனநல செவிலியர் துறை சார்பில், உலக ஆட்டிசம் தினம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பாகூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்தது.
நிகழ்ச்சிக்கு, டாக்டர்கள் ஆனந்தவேலு, கந்தன் ஆகியோர் தலைமை தாங்கினர். மாணவி தனுஷியா வரவேற்றார். கல்லுாரி ஆசிரியைகள் காயத்திரி, திவ்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவர் பகத்சிங் ஆட்டிசம் மையக் கருத்து குறித்து விளக்கினார்.
மாணவி கவுசிகா ஆட்டிசம் பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை கல்வியை விளக்கினார்.
தொடர்ந்து கல்லுாரி மூன்றாமாண்டு மாணவர்கள் குழு ஆட்டிசம் குறித்து விழிப்புணர்வு நாடகம் நடந்தது.
ஏரளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். மாணவி சிந்துஜா நன்றி கூறினார்.

