/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பஸ் ஊழியர்களை தாக்கிய ஆட்டோ டிரைவருக்கு வலை
/
பஸ் ஊழியர்களை தாக்கிய ஆட்டோ டிரைவருக்கு வலை
ADDED : மார் 04, 2025 04:29 AM
பாகூர்: தனியார் பஸ் ஊழியர்களை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த ஷேர் ஆட்டோ டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.
பண்ருட்டி அடுத்த சாத்திப்பட்டு வடக்கு வீதியை சேர்ந்தவர் கொளஞ்சியப்பன்,43; தனியார் பஸ் கண்டக்டர். இவர், கடந்த 27ம் தேதி மாலை, புதுச்சேரி-கடலுார் வழி தட பஸ்சில், பணியில் இருந்தபோது, கிருமாம்பாக்கம் ஆறுபடைவீடு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை நிறுத்தத்தில், பஸ் நின்றது.
அப்போது, அங்கிருந்த பாகூர் பங்களா வீதியை சேர்ந்த ேஷர் ஆட்டோ டிரைவர் கிரி, கொளஞ்சியப்பனிடம் இங்கு பயணிகளை ஏற்றி, இறக்க கூடாது என கூறி, தகராறு செய்து, அவரையும், டிரைவர் பழனிசாமியையும் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார்.
படுகாயமடைந்த பழனிசாமி கடலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
புகாரின் பேரில், கிருமாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.