ADDED : ஜூலை 26, 2024 10:53 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம்: தெற்கு பகுதியில் புதிய டிஜிட்டல் நவீன தானியங்கி சிக்னலை எஸ்.பி., மோகன்குமார் இயக்கி வைத்தார்.
புதுச்சேரி தெற்கு பகுதி போக்குவரத்து போலீஸ் நிலையத்திற்குட்பட்ட அரியாங்குப்பம், தவளக்குப்பம் ஆகிய பகுதியில் சிக்னல் இயங்கி வந்தது. பழைய சிக்னல் விளக்குகள் அகற்றப்பட்ட, புதிய டிஜிட்டல் நவீன தானியங்கி சிக்னல், அரியாங்குப்பம், தவளக்குப்பம், கன்னியக்கோவில் ஆகிய பகுதியில் பொருத்தப்பட்டது.
அதையடுத்து, அரியாங்குப்பத்தில், புதிய டிஜிட்டல் சிக்னல் விளக்குளை எஸ்.பி., மோகன்குமார் இயக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் இன்ஸ்பெக்டர் கணேசன் உட்பட போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.