
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : கரிக்கலாம்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் வகுப்பு வாரியமாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
பள்ளி துணை முதல்வர் சித்ரா தலைமை தாங்கினார். விரிவுரையாளர் ஸ்ரீதரன் வரவேற்றார்.
தலைமையாசிரியை குணசெல்வி சிறப்புரையாற்றினார்.
விழாவில், பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த கல்வியாண்டில் பள்ளியில் 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, வகுப்பு வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை ஆசிரியர்கள் செய்திருந்தனர்.