நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம்: கரிக்கலாம்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பரிசளிப்பு விழா நடந்தது.
பள்ளி துணை முதல்வர் சித்ரா தலைமை தாங்கினார். தலைமையாசிரியர் குணச்செல்வி வரவேற்றார். ஆசிரியை கண்ணம்மாள் தொகுத்து வழங்கினார்.
விழாவில் கிராம மக்கள் சார்பில், பள்ளியில் கடந்தாண்டு பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு முதல் பரிசாக 3 ஆயிரம், இரண்டாம் பரிசாக 2 ஆயிரம், மூன்றாம் பரிசாக ஆயிரம் ரூபாய் வழங்கி கவுரவித்தனர். பொறுப்பாசிரியர் ஸ்ரீதரன் நன்றி கூறினார்.