நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம்: மடுகரை வெங்கடசுப்பா ரெட்டியார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா நடந்தது.
பள்ளி துணை முதல்வர் சிவக்குமார் தலைமை தாங்கினார். தலைமையாசிரியை வசந்தி முன்னிலை வகித்தார். நெட்டப்பாக்கம் இன்ஸ்பெக்டர் கீர்த்திவர்மன், சப் இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன் வாழ்த்துரை வழங்கினர். துணை சபாநாயகர் ராஜவேலு மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் தனபூபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

