
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வில்லியனுார்: கணுவாபேட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் நடந்த விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
கணுவாபேட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் 2023-24ம் கல்வி ஆண்டிற்கான விளையாட்டுப் போட்டிகள் நடந்தது. பள்ளி உடற்கல்வி ஆசிரியர் திருமாவளவன் தலைமையில் கிரிக்கெட், கயிறு இழுத்தல், ஓட்டப் பந்தயம், உயரம் தாண்டுதல், உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடந்தன. விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியை விஜயலட்சுமி தலைமை தாங்கி, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினார்.
பள்ளி பொறுப்பு ஆசிரியர் இளஞ்செழியன், ஆசிரியை ருவியர்பெரோசியா, உடற்கல்வி ஆசிரியர் திருமாவளவன் பங்கேற்றனர்.