/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சாதனை மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா
/
சாதனை மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா
ADDED : செப் 07, 2024 07:02 AM

திருபுவனை : திருபுவனை அரசு உயர்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அரசுப் பள்ளிகளில் மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
புதுச்சேரி முதன்மைக் கல்வி அலுவலர் மோகன் தலைமை தாங்கினார். தலைமையாசிரியர் சரவணன் வரவேற்றார். கடந்த கல்வியாண்டில் எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வில் அரசுப் பள்ளிகளில் 500க்கு 487 மதிப்பெண்கள் பெற்று, மாநில அளவில் முதலிடம் பிடித்த பள்ளி மாணவி அன்பரசிக்கு ஓய்வுபெற்ற முதல்வர் ராமையன் ரூ.14 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கினார். பள்ளியில் இரண்டாமிடம் பிடித்த மாணவி சங்கீதா, மூன்றாமிடம் பிடித்த மாணவி ஹரிணி ஆகியோருக்கும் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.
திருபுவனை பிரைட் பிரதர்ஸ் நிறுவனத்தின் சார்பில் மூத்த மேலாளர் மகேஸ்வரன், மேலாளர்கள் ஜெயபால், ஜோயல் ஆகியோர் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அடையாள அட்டை மற்றும் டைரி வழங்கி வாழ்த்தினர்.
ஆசிரியை சாந்தி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். பள்ளியின் மேலாண்மைக்குழு தலைவர் வேல்முருகன் வாழ்த்துரை வழங்கினார். ஆசிரியை கோதைநாயகி நன்றி கூறினார்.