ADDED : ஏப் 29, 2024 04:02 AM
அ நிறம் | அளவு
நெட்டப்பாக்கம் : பண்டசோழநல்லுார் அரசு தொடக்கப் பள்ளியில் பரிசளிப்பு விழா நடந்தது.
பள்ளி தலைமையாசிரியர் கலியமூர்த்தி தலைமை தாங்கினார். ஆசிரியை மேகலா வரவேற்றார். விழாவில் பள்ளியில் படிக்கும் எல்.கே.ஜி., முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்கள், பெற்றோர் கலந்து கொண்டனர்.
ஆசிரியை மேகலா நன்றி கூறினார்.
