ADDED : மே 16, 2024 03:03 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: கோரிமேடு இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் செவிலியர்களை கவுரவிக்கும் வகையில், விருதுகள் வழங்கப்பட்டன.
கோரிமேடு, இ.எஸ்.ஐ., மருத்துவமனையில், உலக செவிலியர் தின விழா நேற்று நடந்தது. விழாவிற்கு, ரோட்டரி கிளப் ஆப் புதுச்சேரி பிரைடு மண்டல தலைவர் வைத்தியநாதன் தலைமை தாங்கினார். மருத்துவ கண்காணிப்பாளர் சீனிவாசன் முன்னிலை வகித்தார்.
அனைத்து செவிலியர்களையும் கவுரவிக்கும் வகையில் விருதுகள் வழங்கப்பட்டன. தலைமை செவிலியர் கண்காணிப்பாளர் சுந்தரி ஏற்புரை வழங்கினார். ஜானகி நன்றி கூறினார்.