/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பல்வேறு துறைகளில் சாதித்தவர்களுக்கு விருது
/
பல்வேறு துறைகளில் சாதித்தவர்களுக்கு விருது
ADDED : மே 10, 2024 12:56 AM

புதுச்சேரி: பிரெஞ்சு இரண்டாவது உலக யுத்தம் முடிந்த நினைவு தின விழாவில் பல்வேறு துறைகளில் சாதித்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
பிரெஞ்சு இரண்டாவது உலக யுத்தம் முடிந்த நினைவு தினம் புதுச்சேரி ரேவாய் சோசியல் கட்டடத்தில் நடந்தது. முன்னாள் பிரெஞ்சு பாராளுமன்ற உறுப்பினரும், பாக் என்ற பிரெஞ்சு அமைப்பின் தலைவருமான துபாய் குழந்தை தலைமை தாங்கினார்.
பாக் பிரெஞ்சு அமைப்பின் துணைத் தலைவர் அந்துவன் அந்தோணி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக அல்லியன்ஸ் பிரான்சிஸ் அமைப்பின் தலைவர் நல்லான் சதீஷ், தேசிய விருது பெற்ற சமூக சேவகர் ஆதவன், சுவனீர் பிரெஞ்சு அமைப்பின் தலைவர் பைரவன் சாலமோன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
விழாவில், சிறந்த சமூக சேவை செம்மல் விருது சமூக சேவகர் ஆதவனுக்கும், சிறந்த பிரெஞ்சு நற்பணிச் செம்மல் விருது பைரவன் சாலமனுக்கும் வழங்கப்பட்டது.தொடர்ந்து ஏழை மக்களுக்கு இலவச அரிசி,அன்னதானம் வழங்கப்பட்டது.