ADDED : ஜூலை 04, 2024 03:32 AM

நெட்டப்பாக்கம், : புதுச்சேரி - தமிழ்நாடு ஓபன் பாடிபில்டிங் சாம்பியன் ஷிப் போட்டி நெட்டப்பாக்கம் கம்பன் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.
இந்தியன் பாடிபில்டிங் பிட்டனஸ் அசோசியேஷன் மற்றும் கரியமாணிக்கம் நியூ அர்னால்டு ஜிம் சார்பில் நடந்த போட்டிக்கு, சங்கத் தலைவர் பிரதீஸ்வரன் தலைமை தாங்கினார். செயலாளர் ஜெயமுனிசாமி, பொருளாளர் ஏழுமலை, பொது செயலாளர் நாகேஷ் பிரசாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வாழுமுனி வாழ்த்துரை வழங்கினார்.
சிறப்பு அழைப்பளராக துணை சபாநாயகர் ராஜவேலு கலந்து கொண்டு ஆணழகன் போட்டியை துவக்கி வைத்து, வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கு பரிசுகள் மற்றும் கேடயத்தை வழங்கினார். போட்டியில் 55, 60, 65, 70, 75, 80, 90 கிலோ பிரிவில் போட்டிகள் நடத்தப்பட்டது.
இதில் நுாற்றுாக்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கரியமாணிக்கம் நியூ அர்னால்டு ஜிம் நிர்வாகிகள் செய்திருந்தனர்.