/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு உயர்நிலைப் பள்ளியில் விளையாட்டுப் போட்டி பரிசளிப்பு
/
அரசு உயர்நிலைப் பள்ளியில் விளையாட்டுப் போட்டி பரிசளிப்பு
அரசு உயர்நிலைப் பள்ளியில் விளையாட்டுப் போட்டி பரிசளிப்பு
அரசு உயர்நிலைப் பள்ளியில் விளையாட்டுப் போட்டி பரிசளிப்பு
ADDED : ஏப் 25, 2024 11:54 PM

திருக்கனுார்: சுத்துக்கேணி அரசு உயர்நிலைப் பள்ளியில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிக்கப் பட்டது.
திருக்கனுார் அடுத்த சுத்துக்கேணி அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆண்டு விளையாட்டுப் போட்டி நடந்தது. ஓட்டம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல் உள்ளிட்ட தடகளப் போட்டிகள் மற்றும் கிரிக்கெட் போட்டி, கோ கோ போட்டிகள் நடத்தப் பட்டன.
வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. தலைமை ஆசிரியர் திருவரசன் தலைமை தாங்கினார். பயிற்சி பட்டதாரி ஆசிரியர் சரவணராஜா வரவேற்றார். உடற்கல்வி ஆசிரியர் ஜவஹர் பத்பநாபன் நோக்கவுரை மற்றும் ஆண்டறிக்கையை வாசித்தார். முதன்மை கல்வி அதிகாரி தனசெல்வன் நேரு சிறப்புரையாற்றினார்.
வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டு துறை இணை இயக்குநர் வைத்தியநாதன் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார். ஆசிரியர்கள் பரமேஸ்வரி, விஜயா, ராஜேஸ்வரி, தாரணி, சவுமியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

