/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு மேல்நிலைப்பள்ளியில் சட்டங்கள் குறித்து விழிப்புணர்வு
/
அரசு மேல்நிலைப்பள்ளியில் சட்டங்கள் குறித்து விழிப்புணர்வு
அரசு மேல்நிலைப்பள்ளியில் சட்டங்கள் குறித்து விழிப்புணர்வு
அரசு மேல்நிலைப்பள்ளியில் சட்டங்கள் குறித்து விழிப்புணர்வு
ADDED : ஆக 14, 2024 06:05 AM

அரியாங்குப்பம், : நோணாங்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் அடிப்படை சட்டங்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
பள்ளி மாணவர்களுக்கு அடிப்படை சட்டங்களை அறிந்து கொள்ளும் வகையில், நியாய ஒளி என்ற திட்டத்தை அரசு துவங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, நோணாங்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில், அம்பேத்கர் அரசு சட்டக்கல்லுாரி சார்பில், நேற்று அடிப்படை சட்டங்கள் குறித்து மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
பள்ளி துணை முதல்வர் கல்யாணி தலைமை தாங்கினார். நியாய ஒளி திட்டத்தின் நோடல் அதிகாரி, பூங்குழலி வரவேற்றார். அம்பேத்கர் அரசு சட்டக்கல்லுாரி துணை பேராசிரியர் விஜயன் வாழ்த்துரை வழங்கினார்.
சிறப்பு விருந்தினராக வழக்கறிஞர் காஞ்சனா மாலா, அடிப்படை சட்டங்கள் குறித்தும், சட்ட விதிமுறைகள் பற்றி விளக்கம் அளித்து,துண்டுபிரங்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில், சட்ட கல்லுாரி மாணவர் மோகன்தாஸ், மதிவாணன் உட்பட பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

