/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஊட்டச்சத்து குறித்து விழிப்புணர்வு
/
ஊட்டச்சத்து குறித்து விழிப்புணர்வு
ADDED : பிப் 26, 2025 04:56 AM
புதுச்சேரி: பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து குறைபாடுகள், குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் கீழ் இயங்கும், குழந்தைகள் நல வளர்ச்சி திட்டம், முதலியார்பேட்டை அங்கன்வாடி மையம் சார்பில், விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நெல்லித்தோப்பு பெரியார் நகர், மகாத்மா காந்தி உயர்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், சுகாதார நிலைய மருத்துவர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விழிப்புணர்வு நிகழ்ச்சியில், பச்சை காய்கறிகள், பழ வகைகள் மற்றும் ஊட்டச்சத்து உணவு பொருட்களை பார்வைக்காக வைக்கப்பட்டன. பாலுாட்டும் தாய்மார்கள் சத்தான உணவுகளை உண்ண வேண்டும் என, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.