/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மக்கள் மருந்தகம் குறித்து விழிப்புணர்வு
/
மக்கள் மருந்தகம் குறித்து விழிப்புணர்வு
ADDED : மார் 08, 2025 03:52 AM

புதுச்சேரி : மக்கள் மருந்தகம் குறித்து, மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
மத்திய அரசு சார்பில், தரமாகவும், விலை குறைவாகவும், ஏழை மக்கள் பயன்பெறும் வகையில், பிரதமரின் மக்கள் மருத்தகம் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. நாடு முழுதும், 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் மருந்தகம் அமைக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கடந்த 1ம் தேதி முதல் நேற்று 7ம் தேதி வரை விழிப்புணர்வு வாரம் கொண்டாடப்பட்டது. அதன்படி, கருவடிக்குப்பம் ரெயின்போ நகர் தனியார் பள்ளியில், விழிப்புணர்வு வார நிகழ்ச்சி நடந்தது.
முத்தியால்பேட்டை மக்கள் மருந்தக உரிமையாளர் கோவிந்தராஜலு, சீதா உட்பட பலர் பங்கேற்றனர்.