தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம்

விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம்

விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம்


ADDED : மே 29, 2024 05:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 29, 2024 05:18 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : புதுச்சேரி லாஸ்பேட்டையில் உலக பல்லுயிர் தினத்தையொட்டி, நரிக்குறவர் சமூக மாணவர்களுக்கான விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம் நடந்தது.

புதுச்சேரி அரசு வனத்துறை மற்றும் அர்பன் ட்ரைப்ஸ் புரோகிராம் ஆப் அனிமல் ரெஸ்குயர்ஸ் அமைப்பின் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு வேளாண் அலுவலர் கலைச்செல்வன், அனிமல் ரெஸ்குயர்ஸ் வின்னிபீட்டர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலத்தை லாஸ்பேட்டை இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலபதி துவக்கி வைத்தார். ஊர்வலத்தில் பங்கேற்ற மாணவர்கள் விலங்குகள் போன்று உருவ பொம்மை அணிந்து பொதுமக்களுக்கு பல்லுயிர்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் விதமாக துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தொாடர்ந்து இரண்டாவது நாளாக லாஸ்பேட்டை நரிக்குறவர் காலனியில் மாணவர்களுக்கான ஓவியப் போட்டி, பறவைகளை காணுதல் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us