ADDED : மார் 10, 2025 06:15 AM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: உலக கண் நீர் அழுத்த நோய் விழிப்புணர்வு வாரத்தையொட்டி, இந்திய மருத்துவர்கள் சங்கம், புதுச்சேரி கண் மருத்துவர்கள் சங்கம், ஜோதி கண் மருத்துவமனை மற்றும் ரோட்டரி சங்கம் சார்பில் விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் பரிசோதனை முகாம், கடற்கரை சாலை, காந்தி திடலில் நடந்தது.
கண்காட்சியை கவர்னர் கைலாஷ்நாதன் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், புதுச்சேரி நகராட்சி ஆணையர் கந்தசாமி, ரோட்டரி சங்கத்தின் மாவட்ட ஆலோசகர் மணி, மாவட்ட ஆளுநர் வைத்தியநாதன், இந்திய மருத்துவ சங்க புதுச்சேரி தலைவர் சுதாகர், ஜோதி கண் மருத்துவமனையின் நிறுவனர் வனஜா வைத்தியநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். உலக கண் நீர் அழுத்த நோய் பரிசோதனை முகாம் வரும் 18ம் தேதி வரை நடக்கிறது.
