ADDED : மே 02, 2024 12:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : புதுச்சேரி நலவழித்துறை தேசிய கொசு மற்றும் பூச்சிகளால் பரவும் நோய் தடுப்பு திட்டம் மூலம் மலோரிய விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
சுகாதார உதவியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள் மதர் தெரசோ கல்லுாரி மாணவர்கள் பங்கேற்ற ஊர்வலத்தை, துணை இயக்குநர்கள் முரளி, ரகுநாதன் துவக்கி வைத்தனர்.
மலேரியா உதவி இயக்குநர் வசந்தகுமாரி, மலேரியா விழிப்புணர்வு குறித்து பேசினார். ஊர்வலம் நேரு வீதி, காமராஜர் சாலை சந்திப்பில் துவங்கி, கம்பன் கலையரங்கில் முடிந்தது.

