ADDED : ஜூலை 07, 2024 03:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: பாகூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், மலேரியா விழிப்புணர்வு நிகழ்ச்சி குருவிநத்தம் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடந்தது.
தலைமை மருத்துவர் ஆனந்தவேலு தலைமை தாங்கினார். குருவிநத்தம் தாய் சேய் துணை நிலைய டாக்டர் எழிலரசி, முதுநிலை பயிற்சி டாக்டர் நிவேதிகா, தலைமையாசிரியர் வாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சுகாதார உதவி ஆய்வாளர்கள் புகழேந்தி, செல்வம் ஆகியோர் மலேரியா நோய் பரவும் விதம், அறிகுறிகள், தடுக்கும் முறை கள் குறித்து விளக்கினர்.
ஏற்பாடுகளை யானைக்கால் நோய் தடுப்பு பிரிவு ஊழியர்கள் கார்த்திக்கேயன், முருகன் ஆகியோர் செய்திருந்தனர்.