/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தொழிற்பேட்டையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
தொழிற்பேட்டையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : ஏப் 12, 2024 04:34 AM

புதுச்சேரி : மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டையில் தொழிலாளர்களுக்காக, ஓட்டளிப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
இந்திய தேர்தல் ஆணையம், இம்முறை தேர்தல் நடத்தும் வழிமுறைகளில், சுற்றுச் சூழலை காக்கும் வழிமுறைகளையும் இணைத்து செயல்படுத்த வேண்டும் என்ற அறிவுறுத்தி உள்ளது.
இதை கருத்தில் கொண்டு, மாவட்ட தேர்தல் அதிகாரி அலுவலகம் சார்பில் நேற்று காலை மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டையில் உள்ள பொசிகோ கம்பெனியில், தொழிலாளர்களுக்காக வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இதில் மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் தொழிற்சாலை வளாகத்தில் மரக்கன்று நட்டு, சுற்றுச் சூழலை காக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

