/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : ஆக 25, 2024 05:50 AM

வில்லியனுார்: அரியூர் வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையின் சமூக மருத்துவத் துறை சார்பில், உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
வெங்கடேஸ்வரா கல்வி குழுமத்தின் முதன்மை இயக்க அதிகாரி வித்யா தலைமை தாங்கினார். மருத்துவ கல்லுாரி இயக்குனர் ரத்தினசாமி முன்னிலை வகித்தார். பேராசிரியர் ஆர்த்தி இந்தியாவில் உடல் உறுப்பு தானம் குறித்து பேசினார்.
புதுச்சேரி மாநில உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பு ஓய்வு பெற்ற இணை இயக்குனர் ஏஞ்சலின் நீதா ரட்ஜி, உடல் உறுப்பு தானத்தின் முன்னேற்றம் மற்றும் சவால்கள் குறித்து பேசினார்.
நிகழ்ச்சியில் 150க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள் கலந்துகொண்டனர்.
ஏற்பாடுகளை சமூக மருத்துவத்துறை தலைவி பரதலட்சுமி தலைமையில் மருத்துவ பேராசிரியர்கள், துணை ஆசிரியர்கள், முதுகலை மாணவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் செய்திருந்தனர்.

