/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கற்றலில் மாணவர்களின் பங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
கற்றலில் மாணவர்களின் பங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி
கற்றலில் மாணவர்களின் பங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி
கற்றலில் மாணவர்களின் பங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : ஏப் 25, 2024 03:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கனுார்: சோரப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் 'கற்றலில் மாணவர்களின் பங்கு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது.
பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார். ஆசிரியை ஏஞ்சல் மேரி வரவேற்றார்.
நிகழ்ச்சியில், தேசிய நல்லாசிரியர் பசுபதிராஜன் கலந்து கொண்டு, புதிய கல்வியாண்டில் மாணவ, மாணவிகள் கல்வியில் சிறந்து விளங்க, பல்வேறு ஆலோசனைகளை வழங்கி ஊக்கப்படுத்தினார்.
ஆசிரியர் மாணிக்கவேலு நன்றி கூறினார். ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் செய்திருந்தனர்.