/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கொல்லைப்புற நியமனத்தை ஏற்க முடியாது
/
கொல்லைப்புற நியமனத்தை ஏற்க முடியாது
ADDED : ஜூலை 22, 2024 01:47 AM
புதுச்சேரி : கொல்லைப்புற நியமனத்தை ஒருபோதும் ஏற்க முடியாது என, மீண்டும் அதிரடி காட்டியுள்ள சென்னை ஐகோர்ட் தலைமை செயலருக்கு அனைத்து அரசு துறைகளுக்கும் சுற்றிக்கை அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரி அரசு துறைகளில் கொல்லைப்புறமாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக கூறி பொதுப்பணித் துறை கருணை அடிப்படையில் வேலை பெற்ற வவுச்சர் ஊழியர்கள் 10 பேர் சென்னை ஐகோர்ட்டில் கோர்ட் அவமதிப்பு வழக்கினை கடந்த ஜனவரி மாதம் தாக்கல் செய்தனர்.
அதில், கருணை அடிப்படையில் பொதுப்பணித் துறையில் வவுச்சர் ஊழியர்களாக பல ஆண்டுகளாக பணி புரிந்து வருகிறோம். இடஒதுக்கீடு அடிப்படையில் சேர்ந்த நாங்கள் பணிநிரந்தரம் செய்யப்படவில்லை. ஆனால் அரசு மருத்துவக் கல்லுாரி உள்பட பல்வேறு துறைகளில் கொல்லைபுறமாக வந்தவர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். கருணை அடிப்படையில் சேர்ந்துள்ள எங்களையும் பணி நிரந்தரம் செய்ய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என முறையிட்டு இருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி சுப்ரமணியம் முன்னிலையில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது கொல்லைப்புற பணி நிரந்தரம் தொடர்பாக சராமரியாக நீதிபதி கேள்வி எழுப்பினார். மேலும் சட்ட விரோத கொல்லைப்புற நியமனம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் பல்வேறு வழக்குகளில் தீர்ப்பு வழங்கியுள்ளது.
சென்னை ஐகோர்ட்டும் கொல்லைப்புற நியமனம் தொடர்பாக பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இவ்வழக்கிலும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அப்படி இருந்தும் புதுச்சேரி தலைமை செயலர் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இட ஒதுக்கீட்டிற்கு எதிராக உள்ள கொல்லைபுற நியமனத்தை முற்றிலும் ஒழிக்க தலைமை செயலர் மொத்தமுள்ள 56 அரசு துறைகளுக்கு சுற்றிக்கை அனுப்ப வேண்டும்.
அப்படி கொல்லைபுற நியமனம் செய்த துறை இயக்குனர்களையும் இவ்வழக்கில் பிரதிவாதியாக சேர்த்து தலைமை செயலர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு,இரண்டு வார காலத்திற்கு இவ்வழக்கினை ஒத்தி வைத்தார்.
கோர்ட் கடுமையாக உத்தரவினால், கொல்லைப்புற பணியில் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.