ADDED : ஏப் 27, 2024 04:28 AM

புதுச்சேரி : வில்லியனுார் அரும்பார்த்தபுரம் ஏ.ஜி.பத்மாவதி மருத்துவமனை அருகே அக்ஷயா எலைட் ஸ்வீட்ஸ் அண்ட் பேக்கரி புதிய கிளையை முதல்வர் ரங்கசாமி திறந்து வைத்தார்.
புதுச்சேரி ரெட்டியார்பாளையம் அக்ஷயா ஸ்வீட்ஸ் அண்ட் பேக்கரி நிறுவனத்தின் புதிய கிளை 'அக்ஷயா எலைட் ஸ்வீட்ஸ் அண்ட் பேக்கரி' வில்லியனுார், அரும்பார்த்தபுரம், ஏ.ஜி. பத்மாவதி மருத்துவமனை அருகே துவங்கப்பட்டுள்ளது.
இதனை புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி திறந்து வைத்தார். பி.என்.ஐ., நிர்வாக இயக்குனர் இளங்கோ செந்தாமரைகண்ணன் முதல் விற்பனையை துவக்கி வைத்தார். இதில், அரசு கொறடா ஆறுமுகம், சிவசங்கரன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் பன்னீர்செல்வம், தட்டஞ்சாவடி செந்தில் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள், உறவினர்கள், நண்பர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.
புதிய கிளை திறப்பு விழாவில் பங்கேற்றவர்களை கடையின் உரிமையாளர்கள் அருண், பிரபாகர் மற்றும் சைமன்ராஜ் ஆகியோர் வரவேற்று, நன்றி கூறினர்.

