/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தேர்தலையொட்டி புதுச்சேரி பகுதியில் வெடி பொருட்கள் விற்க தடை விதிப்பு
/
தேர்தலையொட்டி புதுச்சேரி பகுதியில் வெடி பொருட்கள் விற்க தடை விதிப்பு
தேர்தலையொட்டி புதுச்சேரி பகுதியில் வெடி பொருட்கள் விற்க தடை விதிப்பு
தேர்தலையொட்டி புதுச்சேரி பகுதியில் வெடி பொருட்கள் விற்க தடை விதிப்பு
ADDED : ஏப் 15, 2024 04:01 AM
புதுச்சேரி : புதுச்சேரியில் லோக்சபா தேர்தலையொட்டி வெடி பொருட்கள் விற்க அதிரடியாக தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி, கலெக்டர் குலோத்துங்கன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:
புதுச்சேரியில் வரும் 19ம் தேதி லோக்சபா தேர்தல் நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடக்கிறது.
தேர்தல் சுதந்திரமாகவும், வெளிப்படையாகவும் நடத்திட மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, தேர்தலின் போது, வெடி பொருட்கள் மற்றும் வெடி மருந்துகளை தவறாக பயன்படுத்துவதை தடுப்பதற்காவும், பொது அமைதி மற்றும் பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவதற்காவும், இந்திய வெடி பொருள் சட்டம் விதிகளின்படி, புதுச்சேரி மாவட்டத்தில், பட்டாசு தயாரிப்பதற்கும், வைத்து கொள்வதற்கும் மற்றும் விற்பதற்க்கும் வழங்கப்பட்ட அனைத்து உரிமங்களும் நாளை மறுநாள் 17ம் தேதி முதல் 20ம் தேதி வரை மற்றும் ஜூன் 2ம் தேதி முதல் 5ம் தேதி வரை தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது.
இந்த ஆணையினை மீறுவோரின் உரிமங்கள் நிரந்தரமாக ரத்து செய்யப்படும். மேலும், உரிய சட்ட வீதிமுறைகளின் கீழ் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.

