ADDED : மே 18, 2024 06:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர்: பாகூர் அடுத்த மணமேடு கிராமத்தை சேர்ந்தவர் விஸ்வநாதன் 64; பாரில் கூலி வேலை செய்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு வேலை அசதியில் சோர்வடைந்து மதுபான கடை வளாகத்திற்குள் ஓரமாக படுத்து துாங்கி உள்ளார். அங்கு நின்றிருந்த மகேந்திரா கார் ஒன்று திடீரென வேகமாக புறப்பட்டு சென்றுள்ளது. ஓட்டுனர் கவணிக்காத நிலையில், விஸ்வநாதன் மீது கார் மோதியது.
இதில், அவருக்கு வலது கை மற்றும் விலா பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர், புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து அவரது மகன் நீலகண்டன் அளித்த புகாரின் பேரில், கார் டிரைவர் பண்ருட்டி கீழிருப்பு பகுதியை சேர்ந்த சிவக்குமார் மீது, பாகூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

