/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாசிக் மதில் சுவர் இடிப்பு ஆக்கிரமிக்க முயற்சியா?
/
பாசிக் மதில் சுவர் இடிப்பு ஆக்கிரமிக்க முயற்சியா?
ADDED : மே 30, 2024 04:33 AM
புதுச்சேரி: இ.சி.ஆரில் பாசிக் சொந்தமான இடத்தை ஆக்கிரமிக்க மதில் சுவர் இடிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி இ.சி.ஆரில் பாத்திமா பள்ளி அருகில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடம் உள்ளது. இந்த இடத்தில் செடிகள் விற்பனை கூடம் அமைக்க பாசிக் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த இடத்தில் பாசிக் நிறுவனம், செடிகள் விற்பனை கூடமும், மதுபான கடையும் அமைத்து இருந்தது. இவை இரண்டையும் முறையாக பராமரிக்காததால், மூடிக்கிடக்கிறது.
இந்நிலையில், பாசிக் கடையின் பின்பகுதியில் உள்ள அரசு இடத்தை சிலர் ஆக்கிரமிக்க முயற்சித்து வருவதாக புகார் எழுந்துள்ளது. அதன் ஒரு பகுதியாக இ.சி.ஆர்., பாசிக் செடிகள் விற்பனை கூடத்தின் பின்பக்க மதில் சுவர் மற்றும் கேட் இடித்து அகற்றப் பட்டுள்ளது.