ADDED : மே 29, 2024 05:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர் : கோடை வெயில் மற்றும் மழையினால் தொற்று நோய் பரவலை தடுக்கும் விதமாக, சிறப்பு துப்புரவு பணியை மேற்கொள்ள வேண்டும் என நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்களுக்கு, உள்ளாட்சி துறை உத்தரவிட்டிருந்தது.
அதன்படி, பாகூர் கொம்யூன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 21ம் தேதி முதல் வரும் ஜூன் 7ம் தேதி வரை சிறப்பு துப்புரவு முகாம் நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கிருமாம்பாக்கம் அடுத்த மணப்பட்டு -மூ.புதுக்குப்பம் பல்மைரா கடற்கரையில் துப்புரவு பணி நடந்தது.
பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ் தலைமையில் நடந்த இம்முகாமில், தனியார் கல்லுாரி மாணவர்கள், பஞ்சாயத்து ஊழியர்கள் பங்கேற்று, கடற்கரையில் 2 டன் குப்பைகளை சேகரித்து, ஹச்.ஆர். ஸ்கொயர் நிறுவனத்திடம் ஒப்படைத்தனர்.