/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கடற்கரை மேலாண்மை திட்டம்: கருத்து கேட்பு கூட்டம் ஒத்தி வைப்பு
/
கடற்கரை மேலாண்மை திட்டம்: கருத்து கேட்பு கூட்டம் ஒத்தி வைப்பு
கடற்கரை மேலாண்மை திட்டம்: கருத்து கேட்பு கூட்டம் ஒத்தி வைப்பு
கடற்கரை மேலாண்மை திட்டம்: கருத்து கேட்பு கூட்டம் ஒத்தி வைப்பு
ADDED : மே 22, 2024 06:56 AM
புதுச்சேரி : புதுச்சேரியில் இன்று நடக்க இருந்த கடற்கரை மேலாண்மை திட்ட கருத்து கேட்பு கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட கடற்கரை ஒழுங்கு முறை மண்டப அறிவிப்பாணைப்படி, புதுச்சேரி 4 பிராந்தியத்திற்கும் திருத்தப்பட்ட கடற்கரை மண்டல மேலாண்மை திட்டம் தயாரிக்கப்பட்டது.
மாவட்ட கலெக்டர் அலுவலகம், புதுச்சேரி மற்றும் உழவர்கரை நகராட்சி அலுவலகம், அரியாங்குப்பம், பாகூர் கொம்யூன் அலுவலகங்கள் மற்றும் புதுச்சேரி மாசுகட்டுப்பாட்டு குழுமம் அலுவலகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.
புதுச்சேரி அரசு தயாரித்துள்ள திருத்தப்பட்ட கடற்கரை மண்டல மேலாண்மை திட்டம் குறித்த கருத்து கேட்பு கூட்டம், மாசு கட்டுப்பாட்டு குழுமம் சார்பில், இன்று 22ம் தேதி காலை 10:00 மணி முதல் கம்பன் கலையரங்கில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. கடற்கரை மேலாண்மை திட்டத்தை ரத்து செய்ய கோரி புதுச்சேரியில் உள்ள மீனவர்கள் போராட்டங்களை நடத்தினர்.
இதனிடையே, கருத்து கேட்பு கூட்டத்தை ரத்து செய்ய, புதுச்சேரி கடற்கரை மேலாண்மை திட்டத்தின் உறுப்பினர்கள் முன்னாள் எம்.எல்.ஏ., இளங்கோ, புகழேந்தி, கனகசபை ஆகியோர் மாவட்ட கலெக்டர், துறை செயலர் உள்ளிட்டோருக்கு மனு அளித்திருந்தனர்.
இந்த நிலையில், கடற்கரை மேலாண்மை திட்டத்தை ரத்து செய்ய மீனவ பஞ்சாயத்தார்கள் சார்பில் சென்னை பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதன் மீதான விசாரணை நேற்று நடந்தது.
அப்போது இன்று 22ம் தேதி நடக்க இருந்த கடற்கரை மேலாண்மை திட்ட கருத்து கேட்பு கூட்டத்தை ஒத்தி வைப்பதாக புதுச்சேரி மாசு கட்டுப்பாட்டு குழுமம் தெரிவித்தது.
இதைத் தொடர்ந்து, இன்று 22ம் தேதி நடக்க இருந்த பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணை ஆக. 12ம் தேதி ஒத்தி வைக்கப்பட்டது.

