தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ நிலுவையில் உள்ள திருமண உதவித் தொகை  விரைவில் கிடைக்க பயனாளிகள் கோரிக்கை

நிலுவையில் உள்ள திருமண உதவித் தொகை  விரைவில் கிடைக்க பயனாளிகள் கோரிக்கை

நிலுவையில் உள்ள திருமண உதவித் தொகை  விரைவில் கிடைக்க பயனாளிகள் கோரிக்கை


ADDED : ஜூலை 28, 2026 08:41 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 28, 2026 08:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

  புதுச்சேரி: புதுச்சேரியில், நிலுவையில் உள்ள திருமண உதவித் தொகையை வழங்க வேண்டும் என பயனாளிகள் எதிர்பார்க்கின்றனர்.

புதுச்சேரி மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு, துறை மூலம், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் மற்றும் விதவை மகள் திருமண உதவித் தொகை வழங்கம் திட்டம் உள்ளது.

இத்திட்டத்தின் மூலம், தற்போது, வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் மகளுக்கு 35 ஆயிரம் ரூபாய், விதவை மகள்களுக்கு 40 ஆயிரம் ரூபாய் உதவித் தொகையாக வழங்கப்படுகிறது. கடந்த ஜனவரி மாதம் வரை 150 விண்ணப்பங்கள் பெறப்பட்டு உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. பிப்ரவரி மாதம் முதல் 90 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, நிலுவையில், உள்ளது. 

இந்நிலையில் கடந்த 2019–2020 நிதியாண்டில் விண்ணப்பித்தவர்களுக்கு மட்டும் இதுவரை உதவித் தொகை வழங்கப்படவில்லை.  இதில், வறுமை கோட்டிற்கு கீழு் உள்ளவர்களுக்கு 18 ஆயிரமும், விதவை மகள்களுக்கு 25 ஆயிரம் ரூபாயும் வழங்க வேண்டி உள்ளது.

இவர்களுக்கு நிதி வழங்க கோப்புகள் தயார் செய்து, உயர் அதிகாரிகளுக்கு அனுப்பபட்டுள்ளது. ஆனால் மேல்மட்டத்தில் அந்த கோப்பு நிலுவையில் உள்ளது. எனவே பயனாளிகள் நலன் கருதி, ஆறு ஆண்டுகளாக கிடப்பில் உள்ள நிதியை உடனே வழங்க வேண்டும் என விண்ணப்பிதவர்கள் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us