/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விநாயகா மிஷன் பல்கலைக்கு சிறந்த கல்லுாரிக்கான விருது
/
விநாயகா மிஷன் பல்கலைக்கு சிறந்த கல்லுாரிக்கான விருது
விநாயகா மிஷன் பல்கலைக்கு சிறந்த கல்லுாரிக்கான விருது
விநாயகா மிஷன் பல்கலைக்கு சிறந்த கல்லுாரிக்கான விருது
ADDED : ஜூலை 06, 2024 04:18 AM

புதுச்சேரி: விநாயகா மிஷன் பல்கலைக்கு உட்பட்ட அலைடு ஹெல்த் சயின்ஸ் துறைக்கு இந்தாண்டின் சிறந்த கல்லுாரிக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
இ.பி.ஜி., என்பது இங்கிலாந்து மற்றும் இந்தியா போன்ற பல்வேறு நாடுகளில் செயல்பட்டு வரும் ஆலோசனை நிறுவனம். இது பொருளாதார ரீதியான ஆலோசனைகளை வழங்குவதோடு கல்வியியல் சார்ந்த பல்வேறு ஆலோசனைகள், மதிப்பீடுகளை வழங்கி வருகிறது.
இதன் அடிப்படையில், 'இந்தியா வாரம் 2024'ன், ஒரு பகுதியாக கல்வியியல் சார்ந்த மாநாட்டையும், கல்வியில் சிறந்து விளங்கும் நிறுவனங்களை அங்கீகரிக்கும் நோக்கிலும், உலகின் முன்னணி பல்கலையான இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்கலையில், சமீபத்திய கல்வியியல் புதுமை மாநாட்டினை நடத்தியது.
இந்த மாநாட்டில் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளிலும் இருந்து கல்வியாளர்கள் பங்கேற்றனர். இதில் விநாயகா மிஷன் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் டீன் செந்தில்குமார் சிறப்பு பேச்சாளராக அழைக்கப்பட்டு 'சர்வதேச மயமாக்குவதில் இந்திய கல்வி' எனும் தலைப்பில் உரையாற்றினார்.
மேலும் சர்வதேச வளர்ச்சிக்கு ஏற்ப கல்வியல் செயல்பாடுகளை சிறந்த முறையில் நடத்தி வருவதை மையப்படுத்தி, விநாயகா மிஷனின் சேலம் விம்ஸ் மருத்துவமனை வளாகம், புதுச்சேரி ஆறுபடை வீடு மருத்துவமனை வளாகம், சென்னை ஆறுபடை வீடு தொழில்நுட்ப கல்லுாரி வளாகம் ஆகியவற்றில் அமைந்துள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறைக்கு இந்தாண்டின் சிறந்த கல்லுாரி விருது வழங்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
பல்கலை வேந்தர் கணேசன் மற்றும் துணை தலைவர் அனுராதா கணேசன் மற்றும் துறை பேராசிரியர்கள், துறையின் டீனுக்கு வாழ்த்தையும், பாராட்டையும் தெரிவித்தனர்.