/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாரததேவி உயர்நிலைப் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் சாதனை
/
பாரததேவி உயர்நிலைப் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் சாதனை
பாரததேவி உயர்நிலைப் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் சாதனை
பாரததேவி உயர்நிலைப் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் சாதனை
ADDED : மே 17, 2024 05:34 AM

திருபுவனை: மதகடிப்பட்டு பாரததேவி ஆங்கில உயர்நிலைப் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் சாதனை படைத்துள்ளது.
மாணவர் சுபாஷ், மாணவி கயல்விழி ஆகியோர் தலா 488 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்தனர்.
மாணவி மாலினி 469 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடம், மாணவர் நீலவன், மாணவி நர்மதா ஆகியோர் தலா 467 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடம் பிடித்தனர்.
450க்கு மேல் 9 பேரும், 400க்கு மேல் 21 பேரும் மதிப்பெண் பெற்றனர். கணிதத்தில் 5 பேர், அறிவியலில் 9 பேர் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்று, கிராமப்புற பள்ளிகளில் சாதனை படைத்துள்ளனர்.
மாணவர்கள் மற்றும் தொடர் சாதனைக்கு துணையாக உள்ள ஆசிரியர்களுக்கு பள்ளி நிர்வாகி இளமதியழகன், மேலாண் இயக்குனர் தாரணி இளமதியழகன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
பள்ளியின் பொறுப்பாசிரியை தேவி மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் உடனிருந்தனர்.