sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பாரதியார் பல்கலைக்கூடத்தில் இன்று திறனறி தேர்வு நடக்கிறது

பாரதியார் பல்கலைக்கூடத்தில் இன்று திறனறி தேர்வு நடக்கிறது

பாரதியார் பல்கலைக்கூடத்தில் இன்று திறனறி தேர்வு நடக்கிறது


ADDED : ஜூன் 22, 2024 04:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 22, 2024 04:35 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம் : பாரதியார் பல்கலைக்கூடத்தில் நிகழ்கலை மற்றும் நுண்கலை படிப்பிற்கு இன்று 22ம் தேதி திறனறி தேர்வு நடக்கிறது.

பாரதியார் பல்கலைக்கூட முதல்வர் அன்னப்பூரணி (பொறுப்பு) வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:

அரியாங்குப்பம் பாரதியார் பல்கலைக்கூடத்தில் இன்று 22ம் தேதி காலை 10:30 மணிக்கு திறனறி தேர்வு நடக்கிறது.

காலை 9:00 மணிக்கு முதல்வர் அலுவலகத்தில் தேர்வர்கள் ஆஜராக வேண்டும். இந்த தேர்வில், பி.பி.ஏ., இசை மற்றும் நடனத்தில் சேர்க்கைக்கான விண்ணப்பதரார்களுக்கான திறனறி தேர்வானது இசை, நடனத்தில், அவர்களின் திறமையை மதிப்பிடுவதற்காக கல்லுாரியில் நடத்தப்படும் தேர்வில் அவர்களின் செயல் திறன் மதிப்பெண் பட்டியலிடப்படும்.

சென்டாக் வழங்கிய பிளஸ் 2 அல்லது அதற்கு சமமான தேர்ச்சி மற்றும் கல்லுாரியில் பெற்ற மதிப்பெண் இறுதிப்பட்டியலை இறுதி செய்ய எடுத்துக் கொள்ளப்படுகிறது.

இளங்கலை நுண்கலை (பி.எப்.ஏ.) சேர்க்கைக்கு விண்ணப்பித்தவர்கள் ஓவியம், சிற்பம், பயன்பாட்டு கலை மற்றும் வடிவமைப்பு ஆகிய 4 சிறப்பு பிரிவுகளில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்யலாம்.இசையில், இளங்கலை, நிகழ்கலை (பி.பி.ஏ.) சேர்க்கைக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், மிருதங்கம், தவில், நாதஸ்வரம் ஆகிய 6 சிறப்பு பிரிவுகளில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும்.

நடனத்தில் இளங்கலை, நிகழ்கலை சேர்க்கைக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களுக்கு பாரதநாட்டியம் முக்கிய பாடமாக ஒதுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us