/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாரதி ஆங்கில உயர்நிலைப் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் சாதனை
/
பாரதி ஆங்கில உயர்நிலைப் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் சாதனை
பாரதி ஆங்கில உயர்நிலைப் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் சாதனை
பாரதி ஆங்கில உயர்நிலைப் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் சாதனை
ADDED : மே 12, 2024 04:52 AM

திருக்கனுார்: சோரப்பட்டு பாரதி ஆங்கில உயர்நிலைப் பள்ளி 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் 6ம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
பள்ளியின் முதல்வர் சம்பத், துணை முதல்வர் சுசிலா சம்பத் கூறியதாவது:
10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 51 மாணவர்களும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றனர்.
மாணவி நேத்ரா 493 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 6ம் இடம், கோமதி 492, லேக்ஸ்டி 489 மதிப்பெண்கள் எடுத்து சிறப்பிடம் பெற்றனர்.
பள்ளி அளவில் 475 மதிப்பெண்களுக்கு மேல் 7 பேரும், 450க்கு மேல் 13 பேரும், 400க்கு மேல் 12 பேரும், 350க்கு மேல் 15 பேரும், 300க்கு மேல் 2 பேரும் மதிப்பெண் பெற்றுள்ளனர்.
பாடவாரியாக தமிழில் 99 மதிப்பெண், ஆங்கி லத்தில் 2 பேர், கணிதத்தில் 7 பேர், சமூக அறிவியலில் 8 பேர் 100க்கு 100 மதிப்பெண், அறிவியலில் 97 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். இப்பள்ளி தொடர்ந்து 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் சிறப்பிடம் பிடித்து சாதனை படைத்து வருகிறது.
பள்ளியில் எல்.கே.ஜி. முதல் 8ம் வகுப்பு வரை சி.பி.எஸ்.இ., (NCERT) பாடத்திட்டம் பின்பற்றபடுகிறது.
பள்ளியின் வெற்றிக்கு ஒத்துழைப்பு தரும் பெற் றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு நன்றி' என்றார்.