/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பீகார் மாநில வாலிபர் போக்சோவில் கைது
/
பீகார் மாநில வாலிபர் போக்சோவில் கைது
ADDED : மே 21, 2024 04:47 AM

காரைக்கால்: சிறுமியை ஆபாச படம் எடுத்து மிரட்டிய பீகார் மாநில வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் அப்துல்கலாம் மகன் அசுருல் ஹக்,24; இவர் கேரளா மெலத்துாரில் கலவை எந்திரம் ஆபரேட்டராக வேலை செய்து வந்தார். இவருடன் வேலை செய்த சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவரின் குடும்பத்துடன் பழகி வந்த அசுருல்ஹக், தனது நண்பரின் 15 வயது மகளிடம் ஆசை வார்த்தை கூறி வீடியோ கால் மூலம் பேசி நிர்வாண படம் எடுத்துள்ளார்.
இந்நிலையில் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர் குடும்பத்துடன் காரைக்காலுக்கு வந்து, அங்கு நடைபெற்று வரும் ரயில் பாதை அமைக்கும் வேலை செய்து வருகிறார்.
அதன்பிறகு சிறுமி, அசுருல்ஹக்குடன் போனில் பேசுவதை தவிர்த்தார். ஆத்திரமடைந்து காரைக்காலுக்கு வந்த அசுருல் ஹக், சிறுமியின் வேறு மொபைல் போனுக்கு ஆபாச படத்தை அனுப்பி மிரட்டினார்.
இதுகுறித்து சிறுமியின் குடும்பத்தார் அளித்த புகாரின் பேரில் காரைக்கால் போலீசார், போக்சோ பிரிவில் வழக்கு பதிந்து, காரைக்கால் ரயில்வே ஸ்டேஷன் அருகே தங்கியிருந்த அசுருல் ஹக்கை நேற்று கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

