/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பீகார் மாநில வாலிபர் துாக்குபோட்டு தற்கொலை
/
பீகார் மாநில வாலிபர் துாக்குபோட்டு தற்கொலை
ADDED : ஜூன் 18, 2024 04:41 AM
காரைக்கால்: காரைக்காலில் காதலியிடம் ஏற்பட்ட தகராறில் பீகார் மாநில வாலிபர் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
காரைக்கால் பாரதியார் சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் பீகார் மாநிலம் பிசான்பூர் பகுதியை சேர்ந்த ரோஷன்குமார், 20; தனது நண்பர்களுடன் தங்கி வேலைசெய்து வந்தார். இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இருவருக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த ரோஷன் குமார், அவர் தங்கிய அறையில் உள்ள சீலிங் பேனில் துாக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.
தகவல் அறிந்த நகர போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை பிரோத பரிசோதனைக்கு அனுப்பிவைத்து, சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.