நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கனுார்: குமாரப்பாளையத்தில் வீட்டின் வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக் மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருக்கனுார் அடுத்த குமாரப்பாளையம் மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் மணிகண்டன், 39; ஏ.சி., மெக்கானிக். இவர் கடந்த மாதம் 16ம் தேதி இரவு டி.என்.31 சிசி 6508 பதிவெண் கொண்ட உறவினர் பைக்கை தனது வீட்டின் வாசலில் நிறுத்தி வைத்திருந்தார்.
மறுநாள் காலை பார்த்தபோது, பைக்கை காணவில்லை. அக்கம், பக்கத்தில் தேடியும் பைக் கிடைக்கவில்லை.
மணிகண்டன் அளித்த புகாரின் பேரில், காட்டேரிக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.